வகுப்பறையில் 11-ம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த காட்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்த உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. 

திருவிக வீதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் பங்கேற்க 11ம் வகுப்பு படித்து வரும் மோகன்ராஜ் என்ற மாணவர், தனது வகுப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த மாணவன் மோகன்ராஜை ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு ஏராளமான போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day