ரேயான் துணி வீழ்ச்சியால் பல்லடத்தில் உற்பத்தி நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூரில் ரேயான் ரக துணியின் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் வருகின்ற 3 ஆம் தேதி வரை உற்பத்தியை தவிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வடமாநிலங்களில் நுகர்வு குறைந்ததால் ரேயான் துணியின் கொள்முதல் விலை மூன்று ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், உற்பத்தி விலையைவிட மார்க்கெட்டில் ரேயான் துணியின் விலையை கொள்முதல் செய்வோர் குறைந்த விலைக்கு கேட்பதால் பல்லடத்தில் இருக்கும் ரேயான் துணி உற்பத்தியாளர்கள் வருகிற 3ஆம் தேதி வரை வேலை  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டம் காடா துணிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Night
Day