மார்ச் 11-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

12 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

2025-26  கல்வியாண்டுக்கான 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தாண்டு கணக்குப்பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்ச் 2 ஆம் தேதி தமிழ் மற்றும் மொழிப் பாடத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் ஐந்தாம் தேதி ஆங்கில பாடத் தேர்வும் 9 ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடத் தேர்வும் நடைபெறவுள்ளது,. மார்ச் 13 ஆம் தேதி இயற்பியல், பொருளியல்  தேர்வுகள் நடைபெறவுள்ளது. மார்ச் 17 ஆம் தேதி கணிதவியல், விலங்கியல் வணிகத் தேர்வு நடைபெறும்.  மார்ச் 23 ஆம் தேதி உயிரியல் , தாவரவியல், வரலாறு பாடத் தேர்வு நடைபெறும். 26 ஆம் தேதி கணினி அறிவியல், கணினி அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகள் நடைபெறும்.  

இதேபோன்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 11-ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும். மார்ச் 16 ஆம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வும் 25 ஆம் தேதி கணிதப் பாடத் தேர்வும் 30 ஆம் தேதி  அறிவியல் பாடத் தேர்வும் ஏப்ரல் 2-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கணக்குப்பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5- தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 20 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Night
Day