மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதிமுக-வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மதிமுகவின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்தல் ஆணையம், மதிமுக-வுக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, பம்பரம் சின்னத்தை பொது சின்னமாக அறிவிக்க கோருவதற்கான நிபந்தனையை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும், ஏற்கனவே ஒதுக்கீட்டு சின்னமாக இருந்த பம்பரம் சின்னத்தை ஒரு தொகுதிக்காக, பொது சின்னமாக அறிவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day