பாமக எம்.எல்.ஏ அருளை கொலை செய்ய முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வடுகம்பட்டியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் சென்ற கார் மீது அக்கட்சியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த பல நாட்களாக உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கும், பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகம்பட்டி பகுதியில் கட்சி நிர்வாகியின் துக்க நிகழ்விற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
அப்போது கட்சியின் மற்றொரு தரப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அருள் வந்த கார் மீதும், அவரது ஆதரவாளர்களின் கார் மீதும் கற்களை வீசி கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். பின்னர் அருளை அவரது ஆதரவாளர்கள் மீட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் சென்று சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அருள் புகார் அளித்துள்ளார்.

Night
Day