பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - மாணவர்கள் காயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கலில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

முள்ளிப்பாடியில் தனியாருக்கு சொந்தமான சிபிஎஸ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், படிக்கும் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை அழைத்து கொண்டு பள்ளி வேன் ஒன்று வந்தது கொண்டிருந்தது. அப்போது, பள்ளி நுழைவாயில் அருகே வந்த போது ஓட்டுநர் ராமசாமி என்பவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகே உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.



இதில், காயமடைந்த 8 மாணவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் செங்கல்பட்டு அருகே அரசுப் பேருந்து ஒன்று மழையின் காரணமாக பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்கியது. தேனியில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதிக்கு வந்த போது சிக்னல் போடப்பட்டதால் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் பேருந்தின் பிரேக்கை பிடித்துள்ளார். அப்போது மழையின் காரணமாக பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்து தறி கெட்டு ஓடி சென்டர் மீடியனில் ஏறி எதிர்திசைக்கு வந்தது. அப்போது சென்டர் மீடியனில் இருந்த மரக்கட்டை பேருந்து சக்கரத்தின் அடியில் சிக்கிக் கொண்டதால் பேருந்து நகராமல் நின்றது. இதனால் பேருந்து பயணிகளும், பொதுமக்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Night
Day