நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடிகர் அஜித் வீடு, சத்தியமூர்த்தி பவன் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இசிஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித்குமாரின் வீடு மற்றும் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வெடிகுண்டு இருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக தகவல் வந்துள்ளது. அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அது புரளி என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day