தொழில்நுட்பக் கோளாறு - நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, மெட்ரோ ரயில் திடீரென சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் திடீரென நின்றது. இதனால், பயணிகள் சிறிது நேரம் ரயிலுக்குள் சிக்கிக்கொண்டு தவித்தனர்.




இதனையடுத்து கதவுகள் திறக்கப்பட்ட பின்னர் பயணிகள் அனைவரும் சுரங்கப்பாதை வழியாக நடந்து உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையத்திற்குச் சென்றனர். மின்சாரம் தடைப்பட்டதால் இந்த கோளாறு ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியாகியுள்ளது.

article-image


சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் மெட்ரோ ரயிலில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நடுவழியில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


Night
Day