தவெக பொதுக்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது, நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை வஞ்சிப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் தவெக சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் விளம்பர திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், விளம்பர திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களில் உரிய நேரத்தில் நெல்லை கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கிய ஆட்சியாளர்களை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜனநாயகத்துக்கு எதிராக கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் சிதைக்கும் வகையில் கைது நடவடிக்கை எடுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

varient
Night
Day