தஞ்சாவூரில் 400 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்  10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல்சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிட்வா புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையினால் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டங்களில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கி உள்ளது. ஆனால் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது மறைக்காகோரையாறு, வளவனாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.  

காலம் கடந்து நடைபெறும் இந்த தூர்வாரும் பணியால் எந்த பலனும் இல்லை என்றும், ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

டிட்வா புயல் காரணமாக நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் பெய்து வரும் மழையால்  20 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா தாளடி நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்தது.  பாசன வடிகால் வாய்க்கால்கள்  சரிவர தூர்வாரப்படாமல் வெங்காயத்த தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியதாக விவசாயிகள் குற்றச்சாட்டினர். ஆகவே, அரசு பாதிக்கப்பட்ட சம்பா தாளடி நெற் பயர்களை பார்வையிட்டு இழப்பீடு மற்றும் பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Night
Day