டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக தலைமையிலான அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் செங்கோட்டைக்கு அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 12 நபர்கள் உயிரிழந்திருப்பதும், 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்து இருப்பதும் மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்த இடத்தில் முறையாக ஆய்வுகளை மேற்கொண்டு, அனைத்து கோணங்களிலும் முழுமையான விசாரணை செய்ய வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் முழுமையான பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைமையிலான அரசை வலியுறுத்தி உள்ளார். 

டெல்லியில் நிகழ்ந்த கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day