சென்னை சென்ட்ரல்-விமான நிலையம் நேரடி மெட்ரோ சேவை ரத்து - தொழில்நுட்பக் கோளாறு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் இடையேயான நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மெட்ரோ நீல வழித்தடத்தில், விமான நிலையம் - மீனம்பாக்கம் இடையே ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மெட்ரோ சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று பச்சை வழித்தடத்தில் மாறி பயணம் மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுத்தியுள்ளது. 

varient
Night
Day