சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 டிட்வா புயல் தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களுக்கு இன்று  மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிட்வா புயலாக மாறியது. இந்த டிட்வா புயல், சென்னை அருகே வந்தபோது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது மேலும் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக நிலவி வருவதாகவும், அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் வலுவிழக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம், தற்போது 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், இன்று வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோன்று நாளை நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இன்று திருவள்ளூர் மாவட்டத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது வாபஸ் பெறப்பட்டு அரஞ்சு நிற எச்சரிக்கையாக மாற்றப்பட்டது.  

Night
Day