சென்னைக்கு அருகே தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்பு...!

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை கடற்கரையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிட்டத்தட்ட 18 மணி நேரமாக அதே இடத்தில் உள்ளதாக ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்றும், அதற்கு முன்பாகவே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Night
Day