சென்னையில் தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 150க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். 

ராம்கோ தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளை கண்டித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சென்னை புளியந்தோப்பு பட்டாளம்- மண்டலம் 6 அலுவலகத்திலும், பேசின் பிரிட்ஜ் மண்டலம் 5 அலுவலகத்திலும் 150க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

கைதான தூய்மை பணியாளர்களை அரும்பாக்கம் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வேலையின்றி வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் தற்போது கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

Night
Day