கோவை கல்லூரி மாணவி வன்கொடுமை - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-


கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு திமுக தலைமையிலான அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு எந்த லட்சணத்தில் உள்ளது என்பது இது போன்ற சம்பவங்கள் மூலம் நாள்தோறும் நிரூபணம் ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு திமுக தலைமையிலான அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் சமூக விரோத செயல்களும், கொலை, கொள்ளை சம்பவங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போதை பொருட்கள் நடமாட்டமும் நாளுக்கு நாள் பெருகி சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது - இதைத்தடுக்க வேண்டிய தமிழக காவல்துறையோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிகாட்டியுள்ளார்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகளும், குற்றவாளிகளும் துணிச்சலோடு உலா வருவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறுகின்ற அனைத்து விதமான குற்றச்செயல்களிலும் திமுகவினர் தான் பெரும் பங்கு வகிக்கின்றனர்- இந்நிலையில் தமிழக காவல்துறை ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமலும், குற்றச்செயல்களை தடுக்க முடியாமலும் ஒதுங்கி விட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா சாடியுள்ளார்.

தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று மேடைக்கு மேடை வீரவசனம் பேசி வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லை? கோவையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?-  திமுக தலைமையிலான ஆட்சியில் கோலோச்சிக்கொண்டிருக்கும் போதை கலாச்சாரத்தை ஒழிக்கும்வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம் அறவே இருக்காது-  எல்லோரும் வேறு மாநிலங்களுக்கு ஓடி விடுவர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக புரட்சித்தலைவி அம்மா விளங்கியதை புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகின்றதோ அப்போதெல்லாம் ரவுடிகளின் ஆதிக்கம் அதிகரித்து சட்டம் -ஒழுங்கு சீரழிந்துவிடுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இன்றைக்கும் அதே நிலைமைதான் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றுதான் நிரந்தர தீர்வாக அமையும் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோவையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணமான அரக்கர்களை உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்-அதேபோன்று, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு தேவையான பாதுகாப்பும், மன நல ஆலோசனையும் வழங்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.  மேலும், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து, இதில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

Night
Day