கொடுங்கையூர் சாலைகளில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

சென்னையை அடுத்த கொடுங்கையூரில் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்றல் நகர், சாமிநாத தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தெருக்களில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் துர்நாற்றம் வீசுவதால் தொற்று பரவும் ஆபத்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Night
Day