கழக தொண்டர்களை சந்தித்தார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த  கழகத் தொண்டர்கள் சந்தித்தனர். அஇஅதிமுகவுக்கு தலைமையேற்று, வழிநடத்த வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
 
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி, அஇஅதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் ராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தித்து, கழகத்தை ஒன்றிணைத்து, தலைமையேற்று வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகரக் கழக செயலாளர் பூவை கந்தனின் தங்கை மகன் கார்த்திக் - திவ்யா தம்பதியினரின் பெண் குழந்தைக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தாய் சின்னம்மா, எலிசபெத் என பெயர் சூட்டி தங்க வளையல் அணிவித்து ஆசி வழங்கினார்.

கழக நிர்வாகிகளுடன் வந்த குழந்தைகளுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பாசத்துடன் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

 சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்.  திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சிவ பாலாஜி மற்றும் கரம்பக்குடி ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் முருகேசன்,

கரம்பக்குடி மீனவரணி மாவட்ட செயலாளர் பரிமளம் உள்ளிட்ட நிர்வாகிகள், புரட்சித் தாய் சின்னம்மாவை சந்தித்தனர்.  அஇஅதிமுகவுக்கு தலைமை ஏற்று வழிநடத்துமாறு கேட்டு கொண்டனர்.

மத்திய சென்னை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரவிச்சந்திரன், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, தன்னை அஇஅதிமுகவில் இணைத்துக் கொண்டார்.  

ஈரோடு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர் மதியழகன், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை  சந்தித்து தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பாஜக சேவைப்பிரிவு தலைவர் சரவணன், ஈரோடு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திக் , திருவொற்றியூர் தெற்கு பகுதி அஇஅதிமுக 14வது வட்டச் செயலாளர் செபாஸ்டியன் அவரது குடும்பத்தினருடன், கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து,  அஇஅதிமுகவுக்கு தலைமையேற்று வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார். 

இதேபோல்,  மதுரவாயல் பகுதியை சேர்ந்த அஇஅதிமுக வட்டச் செயலாளர் யோசுவா, புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து அஇஅதிமுகவுக்கு தலைமையேற்குமாறு வலியுறுத்தினார்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்தனர்.அஇஅதிமுகவுக்கு தலைமையேற்று வழிநடத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

Night
Day