கனமழை: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு திருத்தப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

varient
Night
Day