ஒரே நாளில் சவரன் ரூ.1,520 சரிந்து, ரூ.53,200-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ஆயிரத்து 520 ரூபாய் குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத இந்த விலையேற்றம் நகை பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று ஆபரண தங்கம் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஆயிரத்து 520 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி 4 ரூபாய் 5 காசுகள் குறைந்து 96 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்து 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day