எல்.ஐ.சி. நிறுவனம் மக்களின் நலனுக்காக 2 புதிய திட்டங்கள் அறிமுகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி, மக்களின் நலனுக்காக 2 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்ஐசி-யின் ஜன் சுரக்ஷா மற்றும் பீமா லட்சுமி ஆகிய இரு திட்டங்களை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் துரைசாமி அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த இரண்டு திட்டங்களும் பாலிசி காலம் முழுவதும் உத்தரவாதமான கூடுதல் தொகைகளை வழங்குகின்றன. எல்ஐசி-யின் ஜன் சுரக்ஷா திட்டம் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் சேமிப்பு தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. பீமா லட்சுமி திட்டம் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு காப்பீட்டு திட்டமாகும். இவ்விரு திட்டங்களும் லாபப் பங்களிப்பற்ற பங்கு சந்தை சாராத, தனிநபர் சேமிப்பு காப்பீட்டு திட்டங்களாகும் என எல்ஐசி தெரிவித்துள்ளது. 

Night
Day