ED அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்காக ஆஜராகினார்.

போதைபொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், அவர்கள் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், இன்று ஆஜராக நடிகர் ஸ்ரீகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

Night
Day