பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இரவில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் அறுவறுக்கத்தக்க முறையில் ஆபாசமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அடையாறு மண்டலத்தில் இரவு நேரங்களில் அவர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இரவு அடையாறு மேம்பாலம் அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், அந்த பெண் முன் ஆபாசமாக அறுவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளார். 

சட்டென சுதாரித்த தூய்மை பணியாளர், தான் வைத்திருந்த துடைப்பத்தால் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி விரட்டியடித்துள்ளார். 

Night
Day