திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை : முக்கிய கொலையாளி சதீஷை சுட்டுபிடித்த போலீசார்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கெனவே ஒருவர் கைதான நிலையில், மேலும் 4 பேரை போலீசார் எப்படி கைது செய்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் இருக்கும் காவலர் செல்வராஜின் வீட்டில், தாமரைச்செல்வன் என்ற இளைஞர், 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தப்பியோட முயன்ற போது இளமாறன் என்பவரை குடியிருப்புவாசிகள் பிடித்து காவலதுறையினரிடம் பிடித்து ஒப்படைத்தனர். மேலும், 4 பேரை போலீசார் தேடி வந்தனர். அவர்களில் முக்கிய கொலையாளியான சதீஷ் கொள்ளிடக்கரை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்ற போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது காவலர்களை தாக்கிவிட்டு சதீஷ் தப்பியோட முயன்றதால் அவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

மேலும் 3 பேர் ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே உள்ள ரயில்வே பாலத்தின் கீழே பதுங்கியிருப்பது தெரிந்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டு தப்ப முயன்ற போது நந்தகுமார் வலது கை முறிந்த நிலையிலும், பிரபாகரன், கணேஷ் ஆகியோர் வலது கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் கைது செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது காவலர்கள் ஜார்ஜ் வில்லியம் மற்றும் மாதவராஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

Night
Day