துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்து - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், 'துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வீரத்திற்கும், தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நமது விமானப்படை விளங்குகிறது என்றும் நம் நாட்டை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியது' என்றும் பிரதமர் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 

இதேபோன்று ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படை வீரர், வீராங்கனைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், அவர்களின் தன்னலமற்ற சேவை, தியாகத்திற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும், பதிவிட்டுள்ளார்.

varient
Night
Day