தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு சம்பவம் புதிய சிசிடிவி காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

தலைநகர் டெல்லியை உலுக்கிய கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான புதிய கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணியளவில் ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்பு படை, புலனாய்வுப்படை, தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், டெல்லி போலீசார், மத்திய தொழிலக போலீஸ் படை உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரண நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபி என்பவரும் உயிரிழந்ததாக  நம்பப்படுகிறது.

இந்நிலையில், கார் வெடிப்பு தொடர்பாக புதிய கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. 15 விநாடிகள் கொண்ட அந்த காட்சியில், சம்பவ இடத்தில் நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாக  செல்கின்றன. அப்போது நகர்ந்தபடி இருந்த கார் பெரிய நெருப்பு பந்து போல வெடித்துச் சிதறிய காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.

Night
Day