டெல்லி கார் வெடிப்பு - நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டெல்லி, செங்கோட்டை லால் குய்லா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த அசம்பாவிதத்தில் இருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு லோக் நாயக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அப்பகுதி முழுக்க போலீசார் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சூழலில் நாளை மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூடானில் இருந்து நாளை திரும்பும் பிரதமர் மோடி, நேரடியாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கார் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 

Night
Day