டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் லோக் நயாக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் 2 நாள் பூட்டான் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 

Night
Day