செங்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு - தோட்டாக்கள் ANFO மாதிரிகள் சேகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் கார் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து 2 தோட்டாக்கள், அமோனியம் நைட்ரேட் மாதிரியை தடயவியல் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் சம்பவ இடத்தில் தேசிய பாதுகாப்பு படையினரும் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இந்த நிலையில் நாட்டையே உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்லியில் கார் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து  2 தோட்டாக்கள், அமோனியம் நைட்ரேட் மாதிரியை தடயவியல் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். 2 விதமான வெடி மருந்துகள் உட்பட 40 மாதிரிகளை தடயவியல் துறை சேகரித்துள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. காரில் அமோனியம் நைட்ரேட்டுடன்,  பெட்ரோலை கலந்து வெடிக்க வைத்திருக்கலாம் என என்.ஐ.ஏ சந்தேகித்துள்ள நிலையில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியில் வெடிக்காத வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Night
Day