சிறையில் இருந்தே தேர்தலில் போட்டியிட்ட ஆர்.ஜே.டி வேட்பாளர் ரித் லால் ராய் பின்னடைவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடே எதிர்பார்த்த பீகார் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகி வரும் நிலையில், குற்ற வழக்கில் சிக்கி சிறையில் இருந்தே போட்டியிட்ட ஆர்.ஜே.டி வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார். 

தனாபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம் கிரிபால் யாதவை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் ரித் லால் ராய் போட்டியிட்டார். இவர் குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவாறே தேர்தலில் களம் கண்டார். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ராம் கிரிபால் யாதவை விட குறைவான வாக்குகளை பெற்று ரித் லால் ராய் தோல்விமுகம் கண்டுள்ளார்.

Night
Day