எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கைப்பாவையாக மாநில காவல் துறை டிஜிபி மற்றும் காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக முன்னாள் முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சீரழிந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக குரல் எழுப்புவோரை காவல்துறையினர் ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், காவல்துறையினர் சட்டம் - ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடந்த 5 மாதங்களில் 91 பெண்கள் மற்றும் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டு அதில் 7 பேர் உயிரிழந்தனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் கொல்லப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.