விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை

Nov 5 2019 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உயிருக்கு ஆபத்து உள்ளதாக, சிறையில் அவரை சந்தித்த ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கங்கள் குறித்த ரகசிய தகவல்களை, தனது இணையதள இதழான விக்கிலீக்ஸ்-ல் வெளியிட்டு, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. சித்ரவதை, கொலை மற்றும் பரவலான அமெரிக்க மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதற்காக, அமெரிக்காவில் அசாஞ்சே மீது, 19 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஜாமீனை மீறியதாக அசாஞ்சே தற்போது லண்டன் பெல்மார்ஷ் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அமெரிக்காவுக்கு தன்னை நாடுகடத்தக்கூடாது என்று தொடர்ந்த வழக்கில், அசாஞ்சே தோல்விடையந்துள்ளார். இந்நிலையில், சிறை தண்டனை அனுபவித்துவரும் அசாஞ்சேயை, சித்ரவதை தண்டனைகள் குறித்த ஐ.நா. கண்காணிப்புப் பதிவாளரான Nils Melzer சிறையில் சந்தித்தார். ஜூலியன் அசாஞ்சேயின் உயிருக்கு சிறையில் ஆபத்து உள்ளதாக Nils Melzer பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜூலியன் அசாஞ்சேயை சிறையில் சந்தித்து 5 மாதங்கள் ஆன நிலையில், Nils Melzer இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மனரீதியான நீண்டகால சித்ரவதைக்கு ஆளான ஒருவருக்கு உள்ள அனைத்து அறிகுறிகளும் அசாஞ்சேயிடம் தென்படுவதாகவும், அசாஞ்சேயின் உடல், மனநிலை பற்றிய எச்சரிக்கைகளுக்கு பிரிட்டன் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என்றும் Nils Melzer தெரிவித்துள்ளார். பன்னாட்டுச் சட்டங்களின்படி, அசாஞ்சேவுக்கு வழங்கப்படும் உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்றும், அவர் தன் சட்ட பாதுகாப்புக்காக செய்துகொள்ள வேண்டிய விஷயங்களும் மறுக்கப்பட்டு வருவதாக Nils Melzer மேலும் தெரிவித்துள்ளார். பிரிட்டன் தங்கள் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், சிறையில் இருக்கும்போதே, அசாஞ்சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் Nils Melzer எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00