பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கவலைக்கிடம் : நவாஸ் உயிருக்குப் போராடி வருவதாக குடும்ப மருத்துவர் தகவல்

Oct 30 2019 1:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிறுநீரக செயலிழப்பு, ரத்த அணுக்கள் குறைவு உள்ளிட்ட காரணங்களால், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உடல்நிலை கவலைக்‍கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நவாஸ் ஷெரீஃப் மீதான ஊழல் புகார், பனாமா பேப்பர்ஸ் மூலம் அம்பலமாகியதையடுத்து, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்‍கப்பட்டு, அவர் பாகிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து லாகூர் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்‍கப்பட்டார். அவருக்‍கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை லேசான மாரடைப்பு ஏற்பட்டதாகக்‍ கூறப்படுகிறது. இந்நிலையில், நவாசின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்‍கின்றன. ரத்த அணுக்கள் குறைவு, நெஞ்சு வலி ஆகியவற்றால், நவாஸ் ஷெரீப்பின் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும், அவர் உயிருக்கு போராடுவதாகவும், நவாசின் குடும்ப மருத்துவர் கூறியுள்ளார்.

சிறையில் அடைக்‍கப்பட்டிருந்த தனது தந்தையின் ரத்த அணுக்களில் விஷம் கலக்கப்பட்டதாலேயே அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக நவாஸ் ஷெரீஃப் மகன் உசேன் ஷெரீஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அரசை ஏற்கெனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00