ஹாங்காங் எல்லையில் சீனா படை குவிப்பு - உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்‍க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

Aug 14 2019 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹாங்காங் அரசு நிர்வாகத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹாங்காங் எல்லையில், சீனா தனது படைகளை குவித்து வருவதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்‍க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்படுவோரை அங்கிருந்து வெளியேற்றி, சீனாவுக்குக் கொண்டு சென்று சிறையில் அடைக்க வகை செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டதை எதிர்த்து, பெரும் கலவரம் வெடித்தது. ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, அந்த வளாகத்தில் பேரணி நடத்தியதோடு, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். விமானப் போக்குவரத்து தொடங்கிய நிலையில், திடீரென விமான நிலையத்திற்குள் மக்கள் புகுந்ததால், விமானப் போக்குவரத்து மீண்டும் ஸ்தம்பித்தது. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, பல விமானங்கள் மிகவும் தாமதமாகப் புறப்பட்டன.

இதனிடையே, ஹாங்காங் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்‍க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹாங்காங் எல்லையில், சீனா தனது படைகளை குவித்து வருவதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மக்‍கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்‍கும்படி கேட்டுக்‍கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00