சீனாவை புரட்டிப்போட்ட லெகிமா புயல் : 44 பேர் பலி - 3,200 விமானங்கள் ரத்து
Aug 13 2019 7:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் லெகிமா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் 'லெகிமா' புயல் காரணமாக ஷாங்காய், செஜியாங் உள்ளிட்ட பல நகரங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது அங்கு மணிக்கு 187 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா, டிஸ்னி விடுதி ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. வானிலை பாதிப்பால் ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மூடப்பட்டது இதுவே முதன்முறை ஆகும். தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புயல், மழை காரணமாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த புயல் பாதிப்பு காரணமாக 3 ஆயிரத்து 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. புயல், வெள்ளத்தில் சிக்கி 44 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.