சிரியாவில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஒரு லட்சம் பேர் மாயமாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல்
Aug 9 2019 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஒரு லட்சம் மாயமாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதற்கான முழு பொறுப்பு சிரியாவையே சாரும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து நடத்திய விசாரணையின் இதன் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கடைசி பகுதியான இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 4 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.