அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு

Aug 8 2019 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனத்தின் மீது அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த கூகுள் நிறுவனம், அரசியல் சார்போடு தாங்கள் செயல்பட்டது கிடையாது என விளக்கம் அளித்தது. இதையடுத்து, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார்.

இந்த சந்திப்பை அடுத்து கூகுள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வந்திருப்பதாகவும் டிரம்ப், அப்போது டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ என்ற பொறியாளர், கடந்த அதிபர் தேர்தலில் கூகுள் நிறுவனம் டிரம்பிற்கு எதிராகதான் செயல்பட்டது என பேட்டியளித்தார். இந்த பேட்டி, டிரம்ப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரம்ப், 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் கூகுள் நிறுவனம் தனக்கு எதிராக செயல்பட திட்டமிட்டுள்ளதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00