அமெரிக்காவில் மீண்டும் இரண்டு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் உயிரிழப்பு - அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி

Aug 5 2019 6:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்துக்குள் இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்தனர்.

அமெரிக்காவின் Texas மாகாணம் El Paso நகரில் உள்ள Walmart பல்பொருள் அங்காடியில், நேற்று அதிகாலையில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்‍கியால் சுட்டார். வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்ட நேரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில், 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர். வார இறுதியில் பொருள்களை வாங்க வந்த வாடிக்கையாளர்களை இச்சம்பவம் பீதியடையச் செய்தது.

இந்த சம்பவத்தில் பரபரப்பு அடங்குவதற்குள், ஓஹியோ மாகாணம் டேடன் நகரில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓரேகன் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 10 பேர் உயிரிழந்தனர். துப்பாகிச்சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டார்.

டேடன் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அமெரிக்காவில் இந்த ஆண்டின் 250-வது தாக்குதலாகும்.

கடந்த வாரம், வடக்கு கலிபோர்னியாவில் நடந்த உணவு விழாவில், 19 வயது இளையர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00