துருக்கியில் இருந்து இந்தியா சென்ற சரக்குக் கப்பல் கடத்தல் : ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்
Nov 20 2023 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியில் இருந்து இந்தியா சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று ஏமனின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்டுள்ள "கேலக்ஸி லீடர்" என்ற கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கப்பலை இஸ்ரேல் ராணுவம் கடத்தியதாக ஹவுதிகள் குற்றம் சாட்ட, அதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்குக் கப்பல் ஒன்றைக் கடத்தியுள்ளனர் என்றும் இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் மிக மோசமான சம்பவம் எனக் கூறியுள்ளது. மேலும் கப்பலில் இந்தியர்கள் யாருமில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.