2023ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு : அமெரிக்காவை சேர்ந்த மெளங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எக்கிமோவ் ஆகியோருக்கு பகிர்ந்தளிப்பு

Oct 4 2023 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

நானோ தொழில்நுட்பத்தில் குவான்ட்டம் புள்ளிகள் மூலம் மிகப்பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய அமெரிக்‍காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்‍கு வேதியலுக்‍கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்‍கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். அந்த வகையில் மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்‍கப்பட்டது. அதன்படி அமெரிக்‍காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மௌங்கி ஜி பாவெண்டி, லூயிஸ் ஈ புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ எகிமோவ் ஆகிய 3 பேருக்‍கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்‍கப்பட்டுள்ளது.

நானோ தொழில்நுட்பத்தின் மிகச்சிறிய கூறுகளான குவான்ட்டம் புள்ளிகள் மூலம் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக மூவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குவான்ட்டம் புள்ளிகள் என்பது தொலைக்காட்சிகள் மற்றும் எல்இடி விளக்குகளுக்கு ஒளியைப் பரப்பும் என்பதும், திசுக்களை அகற்றும் போது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு வழிகாட்டவும் உதவும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00