வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அதிபர் கிம் ஜான் உன் அதிரடி உத்தரவு : தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து நடவடிக்கை
Jun 8 2023 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் தற்கொலை அதிகரித்துள்ளதாக கண்டறிந்ததாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, தற்கொலை சோசியலிசத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையை தடுக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.