அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 10 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
Mar 30 2023 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் அந்நாட்டு ராணுவத்தின் 101வது காலட் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த படைப்பிரிவின் 2 பயிற்சி ஹெலிகாப்டர்கள் Trigg County அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மோதி விபத்துக்கு உள்ளாகின. விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, இந்த விபத்து குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.