அமெரிக்கா மீது பலூனை ஏவி உளவு பார்த்ததா சீன அரசு? : சீனப் பயணத்தை ஒத்திவைத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
Feb 4 2023 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உளவு பலூன் விவகாரம் காரணமாக சீன பயணத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஒத்திவைத்துள்ளார். தென்சீனக்கடல், தைவான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்து அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Blinken சீனப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அமெரிக்காவின் மீது மிக அதிக உயரத்தில் பறந்த பலூன் ஒன்று சீனாவுக்காக உளவு பார்த்ததை அமெரிக்க அரசு கண்டுபிடித்துள்ளதைத் தொடர்ந்து இப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீன அதிகாரிகளுடனான தனது சந்திப்புகளின்போது, இந்த பலூன் விவகாரம் ஆதிக்கம் செலுத்துவதை பிளிங்கன் விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.