மியான்மரில் ஜனநாயக அரசு மலர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் ஆளும் ராணுவ அரசு மரணத்தை பரிசளிப்பதாக ஜனநாயக ஆர்வலர்கள் வேதனை
Dec 2 2022 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மியான்மரில் ஜனநாயக அரசு மலர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டால் ஆளும் ராணுவ அரசு மரணத்தை பரிசளிப்பதாக ஜனநாயக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மியான்மரில் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினால் மரணத்தை பரிசாக பெற வேண்டி இருப்பதாகவும், மியான்மரில் கடந்த ஆண்டு முதல் இதுவரை ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடியதற்காக 2 ஆயிரம் பேரை ராணுவ அரசு கொன்றதாக மியான்மர் தேசிய ஐக்கிய அரசு கூட்டணியின் செயல் தலைவர் துவா லாஷி லா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துக்காக போராடுபவர்களை தீவிரவாதிகளாக முத்திரை குத்துவது உலகிலேயே மியான்மர் ராணுவ அரசுதான் என்று அவர் குறிப்பிட்டார்.