ஐப்பானில் மீன்கள் அருங்காட்சியகத்தில் மீன்களுக்கு உணவு அளித்த கிறிஸ்துமஸ் தாத்தா
Dec 1 2022 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐப்பானில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் மீன்களுக்கு உணவு அளிக்கும் காட்சி காண்போரை பிரம்மிக்க வைத்துள்ளது. யோகோஹாமாவில் உள்ள Hakkeijima Sea Paradise அருங்காட்சியகத்தில் சுமார் 3 ஆயிரம் மீன்கள் மற்றும் டால்பின்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த நபர் உணவளித்தார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஸ்கூபா மூழ்காளரின் இச்செயல் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.