உக்ரைன் மற்றும் உலக அமைதிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் : மோதல் போக்கிற்கு எதிர்வினையாற்றுமாறு உலக தலைவர்களுக்கு போப் ஃபிரான்சிஸ் அழைப்பு

Jul 3 2022 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்துள்ள போப் ஃபிரான்சிஸ், மோதலைத் தூண்டும் போக்கிற்கு எதிர்வினையாற்றுமாறு உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்‍ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதல், போரை நிறுத்துமாறு போப் ஃபிரான்சிஸ் வலியுறுத்தி வருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்‍கிழமை பிரார்த்தனையிலும் இந்த கோரிக்‍கையை அவர் வலியுறுத்தி வருவதோடு, ரஷ்யா - உக்‍ரைன் போர் முடிவுக்‍கு வந்து, உலகில் அமைதி நிலவ சிறப்பு பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில், வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற வாரத்திந்திர பிரார்த்தனை நிகழ்ச்சியில் உரையாற்றிய போப் ஃபிரான்சிஸ், உக்ரைன் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்தார். மோதலைத் தூண்டும் போக்கிற்கு எதிர்வினையாற்றுமாறு உலகத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், உலகிற்கு அமைதி தேவை என்றும், ஆயுத சமநிலையை அடிப்படையாகக் கொண்ட அமைதி அது அல்ல என்றும் சுட்டிக்‍காட்டியுள்ளார். அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ அதிகார உத்திகளிலிருந்து உலகளாவிய சமாதானத் திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும் எனவும் போப் ஃபிரான்சிஸ் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00