உக்ரைன் போரைக் கண்டித்து கேன்ஸ் திரைப்பட விழாவில் அரை நிர்வாணமாக போராடிய பெண்
May 21 2022 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் போரைக் கண்டித்து, கேன்ஸ் திரைப்பட விழாவில் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்தபோது, பாலியல் வன்முறையில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உக்ரைனில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவப்பு கம்பளத்தில், உக்ரேனியக் கொடியை தனது உடலில் தீட்டி, பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக கண்டன முழக்கமிட்டார். உடனடியாக அதிகாரிகள் ஆடையைப் போர்த்தி அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் திரைப்பட விழாவில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.