ஸ்பெயினில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - நோய் தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் பொது முடக்கம் அமல்

Oct 27 2020 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயினில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதாக சுகாதார நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். இரவு நேர கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூடுவதன் காரணமாகவே கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா். இதன் காரணமாக, ஸ்பெயினில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டுப் பிரதமா் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார். இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளார். பணிக்குச் செல்வது, மருந்து வாங்கச் செல்வது போன்றவற்றுக்கு பொது முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. பொது இடங்களில் 6 பேருக்கு அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொது முடக்கம் 6 மாதம் வரை அமலில் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00