கொரோனா வைரஸ் தகவல்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தாமதமாகவே தந்ததாக தகவல் : அமெரிக்க செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு

Jun 3 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பற்றிய முழுமையான தகவல்களை, உலக சுகாதார நிறுவனத்துக்கு, சீனா, தாமதமாகவே தந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசை, சீனா, திட்டமிட்டே மற்ற நாடுகளுக்கு பரப்பியதாகவும், வைரஸ் குறித்த தகவல்களை முன் கூட்டியே தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், சீனாவுக்‍கு, உலக சுகாதார நிறுவனம் உதவி வருவதாகவும், அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனை காரணமாகக்‍கூறி, உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வந்த நிதி உதவியையும், அமெரிக்கா, முழுமையாக நிறுத்தி விட்டது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று, இது தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரித்து ஆராய்ந்து, அறிக்‍கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த டிசம்பர் மாதமே சீனாவில் கொரோனா பரவ தொடங்கிவிட்டதாகவும், ஜனவரியில், தொற்றின் வேகம் தீவிரம் அடைந்ததாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்துக்கு, கொரோனா குறித்த உண்மையான மற்றும் முழுமையான தகவல்களை சீனா தெரிவிக்‍கவில்லை என அறிக்‍கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில்தான், கொரோனா குறித்த தகவலை, சீனா, உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவித்ததாகவும், அதன்பிறகுதான், உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்ததாகவும் அறிக்‍கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00