சர்வதேச அளவில் கொரோனாவுக்கு அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் - ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Apr 2 2020 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனாவால் அடுத்த ஒரு வாரத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்றும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை எச்சரித்தது. வைரசை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என்றும் தெரிவித்தது. ஆனாலும் தற்போது 200-க்‍கும்​ மேற்பட்ட நாடுகளில் வைரஸ் கோராத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு தற்போது வரை, 9 லட்சத்து 50 ஆயிரத்து 713 கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 48 ஆயிரத்து 311 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருவது குறித்து அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஒரு வாரத்தில், மேலும் 50 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என்று தெரிவித்த அவர், அதேபோல் மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00